கம்பன் கண்ட சமுதாயம்

மக்கள் கவிஞர் அரு. நாகப்பன் மிகவும் பிரபலியம் ஆகியுள்ள இலக்கியத் தொண்டர். கவியரங்கம் பட்டி மண்டபம், சொற்பொழிவு,  வழக்காடு மன்றம் ஆகிய பலதுறை மேடைகளிலும் சிறக்கப் பணியாற்றுபவர். தமிழ் மொழியால் தாம் பயன்பெறுவதுடன் நின்றுவிடும் அறிஞர் கூட்டத்தைச்சேராதவர். தமிழ்மொழிக்குச் சிறந்த சேவைசெய்ய விழைந்து தமதூரில் தமிழ் இலக்கிய மன்றம் கண்டு சிறப்பாக விழா எடுத்துப் பணியாற்றுபவர்.

அன்றியும் பிற கழகங்கள், மன்றங்கள், சங்கங்களிலும் பங்குபற்றித் தொண்டு செய்யும் நல்லியல்பினர். எனலே தமிழகத்தில் இவர் பங்கு கொள்ளாத இலக்கிய விழாக்கள் அருமை எனலாம். எந்தை பெருமான் மாட்டு எல்லையில்லாத காதல் –பக்தி- பூண்டொழுகுபவர் இவர். ஆதலால் அப்பெருமான் புகழ்பாடுவதில் அலுப்பும், சலிப்பும் இவருக்கு ஏற்படுவதில்லை. கம்பன்  விழாக்கள் பலவற்றிலும் கவியரங்கம் ஏறிக் கவிமாலை புனைந்தவற்றில் ஒரு பகுதியை முன்னர் “கவியரங்கில் கம்பன்” என்ற பெயரில் நூலாக்கி வெளியிட்டார். அப்பதிப்பு முற்றிலும் விற்பனையாகி மறுபதிப்பு வரவேண்டிய நிலையில் உள்ளது.

இப்பொழுது இவருடைய இரண்டாவது கவிதைநூல் “கம்பன் கண்ட சமுதாயம்” என்ற பெயரில் வெளியாக உள்ளது.

இந்த நூலைக் கோவைக் கம்பன் கழகம் 13-2-82 ஆம் தாள் நடைபெறும் கம்பன் விழாவில் வெளியிட்டுக் சிறப்புச்செய்கிறது.