தேவநேயப்பாவாணர் 7 பெப்ரவரி 1902 – 15 சனவரி 1981) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40 – இற்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்காக உழைத்தார். இவரது தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, இவரின் மாணக்கரும் தேசியத்தந்தையுமாகிய பாவலரேறு பெருஜ்சித்திரனார் இவருக்கு “மொழிஞாயிறுதேவநேயப்பாவாணர்” எனப் பெயர்சூட்டினார்.