புத்தர்

உலகத்திலே அதிகமாகப் பரவிச் சிறப்புற்றிருக்கிற பெரிய மதங்களிலே பௌத்த மதமும் ஒன்று. புகழ்பெற்ற பௌத்த மதத்தை உண்டாக்கிய பெரியார் பகவன் கௌதம புத்தர் ஆவார். நமது பாரத நாட்டிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்த படியினாலே பாரத நாடு பௌத்தர்களின் புண்ணிய பூமியாகும். பகவன் புத்தர் பிறந்து இப்போது 2500  ஆண்டுகள் ஆகின்றன. இந்த விழாவைப் பௌத்த உலகம் கொண்டாடுகிறது.