தேம்பாவணி

தேம்பாவணி யென்பது கிறித்துவ சமயத்தை நிறுவியருளிய இயேசு நாதரின் தந்தையாராகிய வளனின் (சூசை யின்) வரலாற்றைக் கற்போருள்ளத்துக்கு ஒரு புத்தமுதாக அமையுமாறு செய்யுளால் காப்பிய நிலையிற் சிறிதும் வேறு படாது இயற்றப்பெற்றதொரு மாண்பு சான்ற நூலாகும்.