ஐங்குறுநூறு

ஐந்திணைகளில் ஒவ்வொன்றுக்கும் குறைந்த அடி வரையறை பெற்ற நூறு நூறு பாடல்களைத் தனித்தனிப் பெற்றுள்ளமையினால் ஐங்குறுநூறு’ இப் பெயர் பெற்றது. இதில் அமைந்த பாடல்கள் அகவற்பாவின் கீழ்எல்லையாகிய மூன்று அடிச் சிறுமையையும் ஆறு அடிப் பேரெல்லையையும் கொண்டவை.

நூலுக்குப் புறம்பாகிய கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை, என்ற வரிசையில் இதன் ஐந்து பகுதிகளும் உள்ளன. இவற்றைப் பாடியவர்கள் முறையே ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார். என்னும் ஐவராவர்.