செந்தமிழ்க் கன்னியைச் செவிலிபோல் வளர்த்துப் பெருமை சேர்த்தது- மதுரையின் நான்காம் தமிழ்ச் சங்கமாகும். அந்தச் சங்கம் நிறுவிய அகுந்தமிழண்ணல் பாண்டித்துரையார் பற்றியும். தமிழ் வளர்க்கும் பணியில் முன்னின்று பாடுபட்ட சேதுபதியினர் பற்றியும் இவ்வரலாறு வரையப்பட்டுள்ளது. தகுதி மிகுதியுள்ள தமிழ் வித்தகர் இளங்குமரனார் அவர் கன்- படிக்கத் தெவிட்டாத பாகுமொழித் தமிழில் “தமிழ்ச் சங்க வரலாற்றை எழுதியுள்ளார். இதற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் ஏற்புடைத்தே / தமிழர்கள், தாங்கள் வாழ்ந்த வகையை வரலாற்று நோக்கில் குறித்து வைக்காதது பெருங்குறை என்பரர்கள். அந்தக் குறையினால்தான் வந்தேறிகளெல்லாம் சொந்தம் கொண்டாடும் சந்தைச் சதுக்கமாகத் தமிழ்நிலம் ஆகி விட்டது.