தமிழிலுள்ள நூல்களுள் காலத்தால் மிக முந்தியவை சங்க இலக்கியங்கள். கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த புலவர் பெருமக்களின் பாடல்களில் சிறந்தன பலவும் கடைச் சங்க காலத்தின் இறுதியில் ஒருங்கு தொகுக்கப்பட்டன. இவை தொகை நூல்கள் எனப்படுபவை. பாவகையாலும், பொருள் வகையாலும், அடிவரையறையாலும், இவை பாகுபாடு செய்யப்பட்டு, எட்டுத் தொகுதிகளாக அமைக்கப்பட்டன. இவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் ‘தொகை’ என்றும், ‘எண் பெருந்தொகை’ என்றும், குறிப்பிட்டுள்ளனர்.
எட்டுத் தொகை நூல்களாவன: நற்றிணை, குறுந்தொகை. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை. அசு நானூறு, புறநானூறு, என்பனவாம். இவ் வரிசை,