விவேக சிந்தாமணி

விவேக சிந்தாமணி என்பது ஒரு பழமையான தமிழ் நூலாகும்இது அனுபவ மூதுரைகளைக் கொ ண்ட தமிழ் செய்யுள் தொகுப்பாகும்

இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது. எந்த காலத்தில்  இயற்றப்பட்ட நூல் என்பதும்  தெரியாது. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். இந்நூலில் சிந்தனைக்குகந்த, பொருள் பொதிந்த வார்த்தைகளால் நீதிகளும், அழகியலும் செய்யுள் நடையில் சொல்லப்பட்டு இருக்கிறது. தனிப்பாடல்களாக இருந்த பாடல்களைத் தொகுத்து இந்த நூல் உருவானது என்ற அனுமானமும் உண்டு.

இந்நூல் பல்வகையாராலும் போற்றப் படுவதற்குப் பாக்களின் செம்மையே முதற்காரணம் எனலாம். இவை நன்கு வகைப்படுத்தி, உரிய தலைப்புக்களைக் கொடுத்துத் தகுந்த விளக்கங்களையும் கற்பனை எழில் விளங்கப் படைத்து, இங்கு வெளியிடப்படுகிறது. தமிழ் மக்கள் இதில் வரும் பாடல்கள் பலவற்றை நன்கு அறிந்திருப்பர். இவற்றுள் சில பழமொழித் தொடர்களாகவும் சில நீதித் தொடர்களாகவும் வழங்கி வருவதைக் காணலாம்.