திருத்தாண்டகம்

சைவசமய நாயன்மார் மூவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்கள் ஏறத்தாழ மூவாயிரம் ஆகும். அவை முதல் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. அடுத்து அப்பர் அடிகள் என வழங்கப்பெறும் திருநாவுக்கரசர் பாடிய மூவாயிரம் பாடல்களும் முறையே நான்கு ஐந்து ஆறாம் திருமுறைகளாகும். அவற்றுக் கடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய ஓராயிரம் பாடல்கள் கொண்டபகுதி ஏழாந்திருமுறையாக வகுக்கப்பெற்றுள்ளது.