பதினெண் கீழ்க்கணக்கு
பண்டை இலக்கியங்களாகிய பாட்டு தொகைகளை அடுத்து வைத்துப் போற்றப் பெறும் நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு (Eighteen Lesser Texts) நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுவது போல் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன
அடிநிமிர்வு இல்லாத வெண்பாக்களினால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பயன்களைப் பற்றிப் பாடுவதே கீழ்க்கணக்கு நூல்கள் என ‘பன்னிரு பாட்டியல்’ தெரிவிக்கின்றது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் முழுமையும் மதுரையில் வாழ்ந்த புலவர்களால் ஆக்கப்பெற்றவை
“நாலடி நான்மணி நானாற்ப(து) ஐந்திணைமுப்
பால் கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலை காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு“
என்ற தனிப்பாடல் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்துக் கூறுகின்றது
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இனியவை நாற்பது
- இன்னா நாற்பது
- களவழி நாற்பது
- கார் நாற்பது
- ஐந்திணை ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமொழி ஐம்பது
- திணைமாலை நூற்றைம்பது
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி நானூறு
- சிறுபஞ்சமூலம்
- இன்னிலை(அ) கைந்நிலை
- முதுமொழிக்காஞ்சி
- ஏலாதி
என மேற்கண்ட பதினெட்டு நூல்களும் கீழ்க்கணக்கு நூல்களாகக் கருதப்படுகின்றன
கீழ்க்கணக்கு என்பது தமிழகத்தில் வழங்கிய ஒரு வகைக் கணக்கு முறையைக் குறித்ததாதல் வேண்டும். கீழ் என்பது கொண்டு சிறு கணக்கு. கைக்கணக்கு என்று இதனைக் குறிக்கலாம். திருநாவுக்கரசர்.


